இறையோன் திருப்பெயராலும் இறைத்தூதரின் திருப்பொருத்தத்துடனும்,
இறைநேசர்களின் திவ்விய வாழ்த்துக்களுடனும் சத்திய மார்க்கத்தின்
நித்தியக் கொள்கைதனைக் காக்கப் புறப்பட்ட இணையம்

Thursday, April 5, 2012

முஹ்யித்தீன் மாலை வியாக்கியானம்


முஹ்யித்தீன் மாலை வியாக்கியானம்
குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி(ரழி) அவர்களின் வாழ்க்கையில் நடந்த அற்புதங்களை உள்ளடக்கிய பாமாலைக்கே முஹ்யித்தீன் மாலை என்று சொல்லப்படுகிறது.


கேரளா மானிலத்தில் கோழிக்கோடு எனும் ஊரை பிறப்பிடமாகவும் கோழிக்கோடு எனும் மாவட்டத்தின் பிரதம காழியுமான அப்துல் அஸீஸின் மகன் காஸிமுஹம்மது எனும் பேரறிஞரினால் இம்மாலை தொகுக்கப்பட்டது. கேரளா மானிலத்தில் மிகப்பெரும் ஆலிமும்,வலிய்யுமாகிய ஸைனுதீன் மஹ்தூம்(ரழி) அவர்களின் இரண்டாவது மகனாகிய அப்துல் அஸீஸ் மஹ்தூம் அவர்களிடம் கல்வி கற்றார்கள். இவர்கள் அறபி,மலையாள மொழிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட கிரந்தங்களை எழுதியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.இவர்கள் ஹிஜ்ரி 1026ல் வபாத்தாகி குற்றிச்சிர எனும் ஊரில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

No comments:

Post a Comment